இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட டாப் 10 மரங்கள்...!
இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட டாப் 10 மரங்கள்...! இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் பற்றி நாம் அறிந்து கொளவது நம் நாட்டின் சுற்றுச்சூழலைக் காக்க உதவும். இந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப சில மரங்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டுள்ளன. இன்னும் சில, இந்திய தட்பவெப்பத்தை ஒட்டிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு தற்போது இங்கு காணப்படுகின்றன. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் பற்றிப் பார்ப்போம். ஆல், அரசு, மா, முருங்கை, கறிவேப்பிலை, வேப்பிலை, நாவல், இலுப்பை, செம்மரம், நெட்டிலிங்கம் ஆகியவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் ஆகும். ஆலமரம், அரசமரம், மாமரம், முருங்கை மரம், கறிவேப்பிலை மரம், வேப்ப மரம், நாவல் மரம், இலுப்பை மரம், செம்மரம், நெட்டிலிங்க மரம் ஆகியவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் ஆகும். 1. ஆலமரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஆலமரம் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும் நிழல் தரும் மரம் ஆகும். இதனுடைய அறிவியல் பெயர் ஃபிகஸ் பெங்காலென்சிஸ் என்பதாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வளரும் ஆலமரம் இந்தியாவின் தேசிய மரமாகும் . இம்மரத்தின் கிளைகளில் தோன்றும் விழுதுகள் ப...