இந்தியாவின் டாப் 20 வனவிலங்கு சரணாலயங்கள்
இந்தியாவின் டாப் 20 வனவிலங்கு சரணாலயங்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் முன்னர் வீரம் என்ற பெயரில் மிருகங்கள், பறவைகள் வேட்டையாடப்பட்டு பல அரியவகை வனவிலங்குகளும், பறவைகளும் இன்று காணாமல் போய்விட்டன. இதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் இந்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் 41 சரணாலயங்கள் இந்திய தேசிய விலங்கான புலிகளை பாதுக்காக்கும் திட்டத்தின் அடிப்படையில் புலிகள் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள முக்கியமான 20 வனவிலங்கு சரணாலயங்களை பற்றி இங்கு காண்போம். அலிபூர் வனவிலங்கு சரணாலயம் அலிபூர் ஜூ மற்றும் கொல்கத்தா ஜூ ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் தொன்மையான சரணாலயமான அலிபூர் வனவிலங்கு சரணாலயம் 1876-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் திறக்கப்பட்டது. இங்கு 2006-ஆம் ஆண்டு வரை வசித்து வந்த இராட்சஸ ஆமை ஒன்றுக்காக இந்த சரணாலயம் உலகம் முழுக்க பிரபலம். அத்வைதா என்று பெயர் கொண்ட இந்த இராட்சஸ ஆமை பிரிட்டிஷ் மாலுமிகளால், கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ராபர்ட் கிளைவ்வுக்கு பரிசாக வழங்க...