இந்தியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள்..!

இந்தியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள்..!

bztop10

இந்தியாவில் பல விதமான தாவரங்கள், விலங்குகள் உள்ளனஇவற்றுள் 515 வனவிலங்கு சரணாலயங்களும், 1180 பறவை இனங்களும், 350 பாலூட்டினங்களும், 30000 பூச்சி இன வகைகளும், 15000 பல்வேறு விதமான தாவரங்களும் உள்ளன. இந்தியாவில் மிகப்பரந்த விரிந்த இத்தகைய தாவரங்களும் மற்றும் விலங்கினங்களும் அனைத்தையுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் இந்தியாவில் முதல் 5 முக்கியமான வனவிலங்கு சரணாலயங்கள் பற்றி காண்போம்.

1. காசிரங்கா தேசிய பூங்கா

bztop10

காசிரங்கா தேசிய பூங்காவானது இயற்கை வளங்களையும், வனவிலங்குகளையும் விரும்பிகின்றவர்களுக்கு மிக சிறப்பு வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான வன விலங்கு சரணாலங்களில் ஒன்றாகும். இப்பூங்காவானது அசாம் மாநிலத்தில் கோலகாட் மற்றும் நாகோன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலகத்திலுள்ள காண்டாமிருங்களில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவில் காணப்படுகிறது. இப்பூங்காவில் அரியவகை வனவிலங்குகளை பாதுகாப்பதிலும் சிறந்து விளங்கி வருவதால் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார பண்பாட்டு நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதியை சுற்றிலும் 858 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. இங்கு யானைகளின் இனப்பெருக்கங்கள், நீர் எருமைகள், மான்கள், ஆகியவற்றின் இனப்பெருக்கத்திற்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இதனால் பன்னாட்டு தேசிய பறவைவாழ் நிறுவனத்தின் சார்பாக சிறந்த வனவிலங்கு சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவனது மே 1 முதல் அக்டோபர் 31 வரை செயல்படாது. அதனால் இந்த பயணத்திற்கான காலத்தை திட்டமிட்டு கொள்ளவேண்டும்.

2. ஜிம்கார்பட் பூங்கா

bztop10

இந்தியாவில் அழிந்துவரும் புலிகளை பாதுகாப்பதற்காக, வனவிலங்கு பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்தது இந்த பூங்காதான். இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த முக்கிய சரணாலயங்களில் இதுவும் ஒன்றாகும். 520 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. 110 வகையான மரங்கள், 50 விதமான பாலூட்டினங்கள், 650 பறவையினங்கள், 25 ஊருவனயினங்கள் உள்ளன. இதன் முக்கிய நோக்கமே வனவிலங்குகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புறச்சூழ்நிலைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கும் கவனம் செலுத்தி வருகின்றனர். இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு மூன்று விதமான அரங்குகள்(ஜீர்னா, பிர்ஜானி, திஹாலா) ஓதுக்கப்பட்டுள்ளது.

3. கிர் வனவிலங்கு தேசிய பூங்கா மற்றும் சரணாலயம்

bztop10

1965ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆசியாவில் உள்ள சிங்கங்களை நேரில் பார்க்ககூடிய அனுபவத்தை இந்த பூங்காவில் அனுபவிக்கிறோம். 1412 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. ஆசியாவில் உள்ள சிங்கங்களை பாதுக்காப்பதற்கு ஒரு முக்கிய இடமாக அமைகிறது. இதனை சசாங்கிர் என்றும் அழைப்பர். குஜராத்திலுள்ள தலாலாகிர் பூங்காவிற்கு அருகில் உள்ளது. கம்பீரமான சிங்கங்கள், சிறுத்தைகள், கரடிகள், நரிகள், சாம்பார் மான்கள், சின்காரா மற்றும் இந்தியாவின்
ராஜநாகங்கள் உள்ளன. 38 வகையான பாலூட்டினங்கள், 300 பறவையினங்கள், 37 வகையான ஊர்வன இனங்கள், 2000 பூச்சியினங்கள் உள்ளன.

4. ஹிமாலயா தேசிய பூங்கா

bztop10

1984ம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கு; பகுதியில் ஹிமாலயா தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பூங்கா 1500அடி முதல் 6000 அடி வரை உயரத்தில் இருப்பது இப்பூங்கா சிறப்பு பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பிரமாண்டமான இப்பூங்கா 1171 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. 375 பறவையினங்கள், பல்வேறு விதமான தாவரங்கள் இருப்பதால் 2014ம் ஆண்டு ஜீன் மாதம் ஐ.நா-வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு கலாச்சார நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இப்பூங்காவில் அழியக்கூடிய விலங்குகளான பனிப்பிரதேசங்களில் உள்ள சிறுத்தைகளும் உள்ளன. இதுவே இதன் அழகாகும்.

5. சுந்தர்பன் தேசிய பூங்கா

bztop10

இந்தியா மற்றும் வங்காள தேசப் பகுதிகளில் பரந்து விரிந்த சுந்தர்பன் தேசிய பூங்காவானது தனித்துவம் வாய்ந்ததாகும். இப்பூங்காவில் சதுப்புநில காடுகள் அதிகமாக உள்ளதால் ஐ.நா-வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார பண்பாட்டு நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சதுப்புநில காடுகளில் பாம்புகள், காட்டுப்பூனைகள், பறக்கும் நரிகள், எறும்புண்ணிகள், காட்டுபன்றிகள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை திரட்டுவதற்கு ஒரு சிறந்த இடமாக இப்பூங்கா விளங்குகிறது. பல்வேறு விதமான தாவரங்களும், விலங்கினங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

வேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் - அவற்றின் புகைப்படங்கள்! 10 Fastest Endangered Species - Their Photos!

2022 – இந்தியாவில் எனக்கு அருகிலுள்ள முதல் 10 கூகுள் தேடல்கள். | 2022 – Top 10 Google Searches Near Me in India

வான்கோழிபற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள் | 10 facts that many people don't know about turkey